காத்தான்குடிநியூஸ்பெர்ஸ்ட் நேயர்களே!!!

காத்தான்குடிநியூஸ்பெர்ஸ்ட் நேயர்களே!!!

-பிஸ்மில்லாகிர்ரஹ்மானிர்ரஹீம்- நேயர்களே!!! (காத்தான்குடிநியூஸ்பெர்ஸ்ட்1⃣)என்ற நமது இணையத்தளம் தவிர்க்கமுடியாத காரனங்களால் சில நாட்களுக்கு தற்காலிகமாக இடை நிருத்தப்படுகின்றது என்பதை மிகவும் மன வேதனையுடன் தெரிவித்துகொள்கின்றோம்!!! இன்ஷாஅல்லாஹ் மிகவிரைவில் முழுமையாக தனது சேவையை வழங்கும். .நன்றி. என்றும் உங்கள் -காத்தான்குடிநியூஸ்பெர்ஸ்ட்1⃣- About these ads

About these ads

இனவாதத்தை தூண்டும் குறுஞ்செய்தி பகிர்ந்ததாக நான்கு முஸ்லீம்கள் கைது!

இணையதளமொன்றில் வெளி வந்த செய்தியொன்றை குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.)அனுப்பிய நான்கு முஸ்லிம் இளைஞர்கள் இன்று பொலிஸ் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் குருநாகள் பன்னல போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கடும் போக்குவாதிகளையும்இ பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் சம்பந்தப்படுத்தி இணைய தளமொன்றில் வெளியிடப்பட்ட செய்தியொன்று தொடர்பில் குவைத்திலுள்ள ஒருவரினால் குறுந்தகவல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த குறுந்தகவலை மேற்படி நான்கு இளைஞர்கள் சிலருக்கு அனுப்பியுளளனர். இதையடுத்து விசாரணை செய்து வந்த … Continue reading

தற்போதைய அமைச்சரவை பன்றி பண்ணை: BBS

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப் போவதாக பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் தற்போதைய அமைச்சரச்வை பன்றி பண்ணையாக மாறியுள்ளது எனவும் அமைச்சரவையை பொது பல சேனா கேவலமாக வர்ணித்துள்ளது . நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டிலேயே பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் . அங்கு மேலும்அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றசாட்டுகளை முன்வைத்துள்ள அந்த தீவிரவாத … Continue reading

வெளிவரும் இரகசியம் ? 880 இஸ்ரேலியர்கள் மரணம், 1861 பேர் காயம் !!

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த ஹமாஸ் – இஸ்ரேல் யுத்தத்தில் இஸ்ரேலியத் தரப்பில் 880 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு புதுத்தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை இஸ்ரேலின் பிரபல பத்திரிகையான “Haartez” இன் நிருபர்களில் ஒருவராகிய “ஆமூஸ் ஹாரீல்” என்பவர் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “கடந்த ஆகஸ்ட் 2ம் திகதி கூடிய இஸ்ரேலின் அமைச்சரவைக் கூட்டத்தில் இஸ்ரேல் இதுவரை சந்தித்துள்ள இழப்புக்கள் பற்றிய ஒரு அறிக்கை வழங்கப்பட்டது. இவ்வறிக்கையில் இந்த ஒரு மாத காலப்பகுதியில் கொல்லப்பட்ட … Continue reading

லேப்டாப்பில் மறைத்து 12 லட்சத்து 50,000 ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற காத்தான்குடி இளைஞன்.

சுமார் 12 லட்சத்து 50,000 ரூபா பெறுமதியான 250 கிராம் தங்கத்தை மடிக் கணனியில் மறைத்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற நபர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (05) இரவு 10 மணியளவில் பெங்களூர் நோக்கி பயணிக்க தயாரானபோதே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். விசாரணைகளின் பின் நகைகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு 30,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டதாக சுங்க … Continue reading

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக ஏ.பி.வெதகெதர நியமனம்-படங்கள்.

-பழுலுல்லாஹ் பர்ஹான்- காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.பி.வெதகெதர 06-08-2014 இன்று புதன்கிழமை காலை -06.06 மணிக்கு தனது கடமைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றார். இங்கு விஷேட துஆ பிரார்த்தனையை மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் (பலாஹி) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள்,நகர சபை உறுப்பினர்கள்,பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய … Continue reading

உயர்தரப் பரீட்சை ஆரம்பம்; நோக்குனர்கள் உதவி புரிவதாக முறைப்பாடு (Photos)

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின்போது மோசடியில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரீ்ட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. சில பகுதிகளில் பரீட்சார்த்திகளுக்கு நோக்குனர்கள் உதவி புரிவதாக ஏற்கனவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவிக்கின்றார். இதேவேளை, பரீட்சை மோசடிகள் மற்றும் பரீட்சையுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து முறையிடுவதற்காக 24 மணித்தியாலங்களும் இயங்கும் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டார்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீகள் நடப்பது ஏற்புடையதல்ல..!!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவுன்சில் தெரிவின் போது முஸ்லிம் காங்கிரஸ் சிபாரிசு செய்த நபர்கள் புறக்கணிக்கப்பட்டதாக மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்கள் தனது பலத்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். 9 பேர் தெரிவினுள் 4 முஸ்லிம்களும்,4 சிங்களவர்களும்,1 தமிழர் என தெரிவு செய்யப்பட்டிருப்பது இன விகிதாசார அடிப்படையில் சரியானதா..?என கேள்விகள் பல எழுந்தாலும்,தற்போதைய இலங்கையின் நிலவரத்தின் படி இனவாதங்கள் ஏற்படுத்தும் கருத்துக்களை அதிகம் சிலாகிப்பது ஆபத்தானது. இங்கே நடந்த தெரிவின் அடிப்படையை,அதாவது தாங்கள் எவ்வாறு இத் தெரிவை … Continue reading

ஹக்கீம் – ரிசாட் துஆவில் இணைந்து போட்டி

எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுத்தீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இணைந்து போட்டியிடுவதாக முஸ்லிம் காங்கிரஸ் இன்று அறிவித்தது. ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் (துவா) இரட்டை இலைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடவுள்ள இவர்களோடு, மலையக முஸ்லிம் காங்கிரசும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.